Thursday, May 16, 2013


படுக்கையறை நிலைக்ககண்ணாடியில் ஒட்டிய உன் வட்டப் பொட்டுக்களும்
என் புத்தககங்களில் நீ முனை மடித்த பக்கங்களும்
ஒப்புக்கொள்ள மறுக்கின்றன

பிரியும் முன் நீ கொடுத்தது
கடைசி முத்தம் என்று.

நினைவுகள் நீயாகவும்
நீ நினைவுகளாகவும்
மாறிய பின்
பிரிகிறோமா சந்திக்கிறோமா என்பது விளங்குவதேயில்லை.



photo credit: Brenda-Starr
via photopin cc

No comments:

Post a Comment